சமவெளி பகுதிகளில் 5 ஆயிரம் பறவைகள் வனத்துறை கணக்ெகடுப்பில் தகவல்

மதுரை, மார்ச் 21: தமிழக வனத்துறை சார்பில் ஈரநில மற்றும் சமவெளி பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளன. இதில், கடந்த 16ம் தேதி பசுமலை, அரிட்டாபட்டி, யானைமலை, பசுமலை, நாகமலை, எழுமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமவெளி பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதில், ஆள்காட்டி குருவி, மைனா பருந்து, மரங்கொத்தி, மயில், கூகை, மயில், வேட்டை பறவைகள் என, 100க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பறவைகள் வந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய தரைக்கடல் முதல் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய சமவெளிகளில் வாழும் மீன் ஆந்தை என்ற பறவை இனம் அதிகளவில் வந்துசெல்வது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட பறவை இனங்களில் 300க்கும் மேற்பட்ட மீன் ஆந்தை ரகத்தை சேர்ந்த இனங்கள் அரிட்டாபட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்வதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சமவெளி பகுதிகளில் 5 ஆயிரம் பறவைகள் வனத்துறை கணக்ெகடுப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: