கமுதி, மார்ச் 23: கமுதி அருகே உள்ள அபிராமத்தில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ரமேஷ்குமாரின் இருசக்கர வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போனது. கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் உத்தரவின் பேரில்,குற்ற தடுப்பு பிரிவை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சகாதேவன், முத்துராஜ் மற்றும் காவலர்கள் கண்ணாயிரமூர்த்தி, ரமேஷ், அப்துல்சமது ஆகியோர் கொண்ட கிரைம் குழுவினர் சிசிடிவி கேமராக்கள் உதவியோடு விசாரணை செய்து இருசக்கர வாகன குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சுழியைச் சேர்ந்த அழகுராஜ்(36) என்பவரை கைது செய்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த இருசக்கர வாகன திருட்டுக்கு உதவியாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post டூவீலர் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.