சிவகங்கை, மார்ச் 23: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்க பற்றி ஆளுமைத்திறன் பயிற்சி நடைபெற்றது.
சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளர் ஜெய்சங்கர் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், கூட்டுறவு சங்க செயலாளர்கள் 80 பேர் பணி நிலைத்திறன், மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி, ஆளுமைத்திறன் பயிற்சியில் கலந்து கொண்டனர். சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கிருஷ்ணகுமார் பயிற்சியை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற துணை இயக்குநர் மங்கேஸ்வரன், ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் வழக்கறிஞர் ராமு ஆகியோர் புத்தாக்க பயிற்சி வழங்கினர்.
The post கூட்டுறவு செயலாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.