சிவகங்கையில் மார்ச் 25ல் படைவீரர் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, மார்ச் 23: முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 25 அன்று நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் மார்ச் 25 அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் படைவீரர், சார்ந்தோர், அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக வழங்கி, நிவர்த்தி செய்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சிவகங்கையில் மார்ச் 25ல் படைவீரர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: