தேனி, மார்ச் 23: உத்தமபாளையம் அருகே சங்கராபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் வசந்த்(24). இவர் சங்கராபுரத்தில் ஜவுளி வியாபாரமும், தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். தேனி நகர், காமராஜர் லைன் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம்(52). இவர் வசந்திடம் வந்து தொழில் துவங்க ரூ. 4 லட்சம் வாங்கினார். இதனையடுத்து, வசந்தின் தந்தை திருப்பதியிடம் இதே பைனான்ஸ் மூலம் மேலும், ரூ.4 லட்சம் கடனாக வாங்கினார்.
இக்கடனுக்கு புரோ நோட்டு எழுதிக்கொடுத்திருந்த நிலையில், வெங்கடாசலம், ஒரு தனியார் வங்கிக்கான காசோலையில் ரூ.8 லட்சத்தை பெற்றுக்கொள்ளுமாறு அளித்தார். இந்த காசோலையை வசந்த் வங்கியில் செலுத்தியபோது, வெங்கடாசலத்திற்கு அந்த வங்கியில் இருந்து கணக்கு முடிந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து வசந்த் தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வெங்கடாசலம் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செக் மோசடி செய்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.