சிவகாசி, மார்ச் 23: சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை அசோகன் எம்எல்ஏ நேற்று நேரில் ஆய்வு செய்தார். சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கிரீட் தூண்களை இணைக்கும் பணிகளும் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 17 கான்கீரட் தூண்களில் தற்போது வரை 9 கான்கீரிட் தூண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கான்கிரீட் தூண்கள் இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாலம் அமைக்கும் பணிகளை அசோகன் எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது, வேறு எந்த பகுதியிலும் இவ்வளவு வேகமாக ரயில்வே மேம்பால பணி அமைந்து இல்லை என்று குறிப்பிடும் அளவுக்கு பணிகள் தரமாகவும் வேகமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.
The post சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.