மதுரை, மார்ச் 23: மதுரையைச் சேர்ந்த நவநீதன், வளையாபதி, தங்கதுரை உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை, உத்தங்குடியில் லே அவுட் பெறப்பட்ட இடத்தில் பூங்கா அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி தரப்பில் அந்த பூங்காவை பாதாள சாக்கடை பம்பிங் நிலையமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே, இத்திட்டப்பணிகளை வேறு பகுதிக்கு மாற்றம் ெசய்வதுடன், சம்பந்தப்பட்ட இடத்தில் பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், இந்த விவகாரத்தில் பம்பிங் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட இடத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post உத்தங்குடியில் பாதாள சாக்கடை பம்பிங் நிலையம் அமைக்க தடை விதிக்க கோரி வழக்கு: மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.