மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 

போடி, மார்ச் 23: போடி அருகே உள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சவுந்திரபாண்டி. இவரது மனைவி வசந்தி (39). இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததுள்ளது. இதனால் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சவுந்தரபாண்டி அடிக்கடி வசந்தியுடன் பிரச்சனை செய்து வருகிறார். நேற்று அதே போல் வசந்தியை சவுந்திரபாண்டி தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியுள்ளார். இதில் வசந்தி படுகாயமடைந்தார். இது குறித்து, போடி தாலுகா காவல் நிலையத்தில் வசந்தி அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜய் சவுந்திரபாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

The post மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: