சிவகங்கை, மார்ச் 23: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி வருகின்ற ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.
சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்கான பயிற்சி வார நாட்கள் பயிற்சியாக 17 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் சனி, ஞாயிறு, வார இறுதி நாட்கள் 17 நாட்களும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 2 மாதம் ஆகும். இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.4550 செலுத்த வேண்டும்.
இப்பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சி, 60 மணிநேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கு வயது வரம்பு கிடையாது. இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகைமதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 04575-243995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.