தொண்டி, மார்ச் 23: தொண்டி அருகே கடற்கரையில் இறந்து ஆமை கரை ஒதுங்கியது. கடல் வளத்தை மேம்படுத்தவும், கடல்வாழ் அரிய உயிரினங்களை பாதுகாக்கவும் கடல் ஆமை, கடல் பசு, கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. வலையில் சிக்கும் கடல் ஆமை, பசு உள்ளிட்டவைகளை மீட்டு கடலில் விட மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தொண்டி, நம்புதாளை, லாஞ்சியடி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் வலையில் தொடர்ந்து சிக்கிய கடல் ஆமைகள் கடலில் உயிருடன் விடப்பட்டது. இந்நிலையில் நேற்று தொண்டி அருகே பிவிபட்டினம் கடல் பகுதியில் 70 கிலோ எடையுள்ள கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
The post இறந்து கரை ஒதுங்கிய ஆமை appeared first on Dinakaran.