வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம்

விருதுநகர், மார்ச் 23: வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் நோய் தாக்கம், நோயின் அறிகுறிகள் தடுப்பு நடவடிக்கை, அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளுதல் போன்ற சுகாதார விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

நாய் கடித்தாலோ அல்லது நக்கினாலும் உடனடியாக கடிபட்ட இடத்தில் குழாய் நீரில் கொண்டு சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4 தடுப்பூசிகள் போட வேண்டும். இத்தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய் தான் கடித்தது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. மேலும் நாய் கடிக்கு மந்திரித்து மருந்து வைத்து கடிப்பட்ட இடத்தில் கட்டுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3மாதத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் appeared first on Dinakaran.

Related Stories: