மதுரை, மார்ச் 21: மதுரை, கருப்பாயூரணி ரிங்ரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(57). இவர் கான்பாளையத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தீபா. இந்நிலையில் சம்பவத்தன்று காரில் வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவி தீபா பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை., இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், வண்டியூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள மதுபான பார் முன்பு நிற்கும் காரில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் பரிசோதனை ெசய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது மரணம் குறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post பாத்திரக்கடை அதிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.