தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு; கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கள்ளக்காதல் ஜோடி சாவில் பரபரப்பு தகவல்கள்

தேனி: ரயில் மோதி 2 பேர் பலியான விவகாரத்தில், தகாத உறவு அம்பலமானதால் கல்லூரி மாணவியும், தனியார் பஸ் டிரைவரும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர் கிராமம் உள்ளது. இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே எஸ்ஐ இர்வினுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண், பெண் உடல்கள் ரயிலில் மோதி பல பாகங்களாக சிதறி கிடந்தன. உடல் பாகங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ்சில் மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்யுக்தா. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக தினசரி பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு மணிகண்டன் ஓட்டிச் சென்ற தனியார் பஸ்சில் சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி மாறியுள்ளது. மணிகண்டன் தனது திருமணத்தை மறைத்து சம்யுக்தாவுடன் தகாத உறவை தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சம்யுக்தாவின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் மணிகண்டன் குறித்து விசாரித்தபோது, அவருக்கு திருமணமானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மணிகண்டன் உடனான காதலை கைவிடுமாறு மகளை கண்டித்துள்ளனர். ஆனால், சம்யுக்தா மணிகண்டனுடான காதலை கைவிடவில்லை. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மணிகண்டனும், சம்யுக்தாவும் விட்டைவிட்டு வெளியேறி டூவீலரில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வந்துள்ளனர். கடைசியாக தேனி அருகே உள்ள வைகை அணைக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். அங்கு பொழுது போக்கிவிட்டு அன்று இரவு 9 மணியளவில் தேனி குன்னூர் வைகையாற்று பாலம் அருகே, மயானத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு காதல் ஜோடி இருவரும் ரயில் தண்டவாளத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி நின்றுள்ளனர்.

அப்போது போடியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் அவர்கள் மீது மோதி, இருவரும் உடல் சிதறி இறந்தனர். இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை விவசாய பணிகளுக்கு சென்றோர் பார்த்து தெரிவித்த பிறகே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் எண் மூலம் போலீசார் விசாரித்தபோதுதான் முழுமையான தகவல் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு; கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கள்ளக்காதல் ஜோடி சாவில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: