இது தெரிந்து மனைவி ராமலட்சுமி கண்டித்துள்ளார். எதையும் பொருட்படுத்தாமல் துரைமுருகன் அந்தப் பெண்ணிடம் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவரை வெறுப்பேற்றுவதற்காக ராமலட்சுமி, தனது உறவினரான சட்டீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரராக உள்ள விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த ஜெயகணேஷ் (35) என்பரிடம் தொடர்பில் இருப்பது போல, அடிக்கடி வீடியோ கால் பேசியுள்ளார். இந்த பிரச்னையில் ஜெயகணேஷை தொடர்பு கொண்ட துரைமுருகன், அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ் விடுமுறையில் வந்து, கடந்த 5ம் தேதி துரைமுருகன் வீட்டிற்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ஜெயகணேஷை நேற்று கைது செய்தனர்.
The post கள்ளக்காதல் விவகாரம் கணவரை வெறுப்பேற்ற மனைவி வீடியோ கால்: டிரைவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர் appeared first on Dinakaran.