அப்போது, காவலாளி வருகை பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறி கூறினார். அப்போது, இளைஞர்கள் சிலர் காவலாளியை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதோடு நுழைவு வாயில் கதவை சேதப்படுத்தினர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், தகராறில் ஈடுபட்டவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ்குமார்(18), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன்(18), சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த ரித்திஷ்(18), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்(18) மற்றும் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ்(19) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பொத்தேரி அருகே காவலாளியிடம் தகராறு 6 கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.