சுங்கச்சாவடி சூறை 300 பேர் மீது வழக்கு

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டியில், நேற்று முன்தினம் சுங்கச்சாவடி திறப்பு விழா நடக்கவிருந்த நிலையில், இருவழிச்சாலை அமைத்து விட்டு நான்கு வழிச்சாலைக்கான சுங்க கட்டணம் நிர்ணயித்ததாக கூறி, சுற்றுப்புற கிராமமக்கள், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுகுறித்து சுங்கச்சாவடி திட்ட இயக்குனர் பிரவீன்குமார், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 300 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுங்கச்சாவடி சூறை 300 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: