இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், அருண்ராஜ் ரஷ்ய கலாச்சாய மையத்திற்குள் அமைந்துள்ள இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில் துறை சபையின் பொது செயலாளர் பதவியை வகிக்கும் தங்கப்பன் (68) ரஷ்ய கலாச்சா மையத்திற்கு தெரியாமல் இந்த மையத்தில் உள்ள இந்தோ ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில் துறை சபையில் அருண்ராஜ் என்பவருக்கு தங்கப்பன் அவரின் கவுரவ பதவியை தவறாக பயன்படுத்தி துணைத் தலைவர் என்ற கவுரவப் பதவியை மோசடியாக வழங்கியுள்ளார். ரஷ்ய தூதரகம் மற்றும் அதன் கீழ்வரும் கலாச்சார மைய அதிகரிகளுக்கு தெரியாமல் தங்கப்பன் அவரின் கூட்டாளியான அருண்ராஜ், ரூபா மற்றும் பல எதிரிகளுடன் சேர்ந்துக் கொண்டு, ரஷ்யன் கலச்சாரம் மையத்தில் பல போலி கம்பெனிகளை நடத்த ஒரு பகுதியை ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாடகைக்கு விட்டும், அதற்காக மாதம் வாடகை ₹1.58 லட்சம் என 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ₹ 1.58 கோடி வங்கி கணக்கு மூலமும் சுமார் ₹4 கோடி வரை ரொக்கமாகவும் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.
மேலும் அருண்ராஜ் ரூபா மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பலருடன் சேர்ந்து கொண்டு புகார்தாரர் நிறுவனத்தை மேம்படுத்த ரஷிய அரசு நிறுவனத்திடம் இருந்து ₹2,000 கோடி வரை முதலீடு பெற்று தருவதாக சொல்லி ரஷிய அரசின் கொடி மற்றும் அதன் சின்னங்களை தவறாக பயன்படுத்திய பல பொய்யான தகவல்களை புகார்தாருக்கு அனுப்பி முதலீடு பெற்று தர ₹7.32 கோடி வரை பெற்று பண மோசடி செய்தும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அருண்ராஜ், ரூபா உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்து 476 சவரன் தங்கம், வெள்ளி பொருட்கள் 400 கிலோ, ₹14.50 லட்சம் ரொக்கம், 11 சொகுசு கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும், திருப்பூர் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்ற தொழிலதிபர் சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில், ரஷிய நிறுவனத்திடமிருந்து ₹4.4 கோடி முதலீடு பெற்று தருவதாக சொல்லி மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மற்றொரு வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அருண்ராஜ் மற்றும் ரூபா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்கு முதலீடு செய்ய முன் வந்துள்ளதாக கூறி ஏமாற்றியவர்கள் மற்றொரு வழக்கில் கைது appeared first on Dinakaran.