இந்நிலையில் எம்.கே.பாலன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அதில் 12 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். இதில் 2 பேர் மட்டும் பரேலில் கடந்த 2017ம் ஆண்டு வெளியே வந்தனர். இதில் சோமு என்கின்ற சோமசுந்தரமும் ஒருவர். அதன் பிறகு பரோல் முடிந்து சிறைக்கு செல்வதை தவிர்த்து சோமு தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். எம்.கே.பி.நகர் மற்றும் ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் இவருக்கு பிடிவாரண்ட் உள்ளது.
இந்த நிலையில் சோமு வியாசர்பாடி பகுதிக்கு வருவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை முல்லை நகர் அருகே மாறுவேடத்தில் வந்த சோமுவை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரிடம் சிக்க கூடாது என்பதற்காக தனது தோற்றத்தை மாற்றி மாறுவேடத்தில் சுற்றி திரிந்ததும், சிறையிலிருந்து இவர் சில ரவுடி கும்பல்களை இயக்கியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post எம்எல்ஏ கொலை வழக்கில் பரோலில் வந்து 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது appeared first on Dinakaran.