இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவரை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இதில், மதன் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மேடினா என்ற பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த 21.1.2021 அன்று மதனுக்கும், சரிதாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இரும்பு பைப்பால் சரிதாவை மதன் தாக்கியுள்ளார். இதில் சரிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து சரிதாவின் சகோதரி அம்மு (53) என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், சரிதாவை கொலை செய்த கணவர் மதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலையுண்டு இறந்து போன சரிதாவின் முதல் குழந்தையான ஷாலி என்பவருக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்குப் பின் மதன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post மனைவியை கொலை செய்த வழக்கில் 2வது கணவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.