மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வீட்டில் பாலியல் தொழில்: பிரபல புரோக்கர் சிக்கினார்

சென்னை: மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு 8வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பெரிய அளவில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு-2 இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்படி சம்பந்தப்பட்ட வீட்டில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் பாரதி நகரை சேர்ந்த பழைய பாலியல் புரோக்கர் டேவிட்ராஜ் (42) என்பவர், இளம்பெண்களை வைத்து ஐடி ஊழியர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

டேவிட்ராஜ் சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல பாலியல் புரோக்கராக திகழ்ந்தவர், பின்னர் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பாலியல் தொழிலை கைவிட்டு 20 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், மீண்டும் டேவிட்ராஜ் தனது பழைய பாணியில் இளம்பெண்களை சப்ளை செய்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் டேவிட்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது, ேமலும் இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

The post மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கில் ஐடி ஊழியர்களை குறிவைத்து வீட்டில் பாலியல் தொழில்: பிரபல புரோக்கர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: