அண்ணாநகர்: ரவுடி நினைவுநாளையொட்டி அண்ணாநகர் பகுதியில் சுவரொட்டி ஒட்டி திருநங்கை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராபர்ட். இவர் சஞ்சனா (30) என்ற திருநங்கையுடன் வசித்தார். கடந்த மாதம் 26ம்தேதி முகமூடி அணிந்து பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரவுடி ராபர்ட்டை வெட்டி கொலை செய்து தப்பினர். இதுசம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படையினர் 6 பேரை கைது செய்து விசாரித்தபோது, ‘’ சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லோகுவின் கூட்டாளிகள் சேர்ந்து பழிக்குப்பழியாக ராபர்ட்டை வெட்டி கொலை செய்துள்ளனர்’ என்று தெரியவந்தது.ரவுடி ராபர்டுக்கும் லோகுவுக்கும் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக ஐந்து வருடமாக தகராறு இருந்துள்ளது.
இந்தநிலையில் ரவுடி ராபர்ட்டின் நினைவுநாள் முன்னிட்டு, ராபர்ட்டின் தம்பி மோசஸ்(25) மற்றும் திருநங்கை சஞ்சனா ஆகியோர் அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டிவருவதாக கிடைத்த தகவல்படி, அண்ணாநகர் போலீசார் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவடிக்கை எடுத்து போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தெரிவித்தபோது மீறி போஸ்டர்கள் ஒட்டியதால் போலீசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மோசஸ், திருநங்கை சஞ்சனா ஆகியோரை கைது செய்தனர்.
The post அண்ணாநகர் பகுதியில் ரவுடி நினைவு நாள் சுவரொட்டி: போலீசுடன் வாக்குவாதம் செய்த திருநங்கை உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.