யஷ்ஷின் அம்மா தயாரிப்பாளர் ஆனார்

பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷின் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘கொத்தாலவாடி’ என தலைப்பிடப்பட்டு இருக்கிறார்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீராஜ் எழுதி, இயக்குகிறார்.

இந்த நிலையில், படக்குழு தற்போது ‘கொத்தாலவாடி’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபினந்தன் காஷ்யப் பின்னணி இசை, விகாஷ் வசிஷ்தா, இசை. 90 நொடிகள் ஓடும் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தின் தலைப்பான ‘கொத்தாலவாடி’, கர்நாடக மாநிலத்தின் குண்ட்லுப்பெட் தாலுக்காவில் உள்ள கிராமத்தை தழுவி சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்திலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Related Stories: