பல்டி அடிக்கும் பிரீத்தி அஸ்ரானி

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு, பிறகு குறும்படத்தில் நடித்தவர் பிரீத்தி அஸ்ரானி. தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் அவர், தமிழில் சசிகுமாருடன் இணைந்து ‘அயோத்தி’ படத்தில் நடித்து பிரபலமானார். பிறகு ‘எலெக்‌ஷன்’ படத்தில் நடித்தார். தற்போது கவினுடன் ‘கிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படம், ‘பல்டி’. கபடி வீரராக ஷேன் நிகாம் நடிக்கிறார். இது அவருடைய 25வது படமாகும். உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி படம் உருவாகிறது. மலையாள படவுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் ஒருவர்.

சில மாதங்களுக்கு முன்பு ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமானார். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், கபடி வீரராக அவர் நடிக்கும் ‘பல்டி’ படத்தில் பிரீத்தி அஸ்ரானி இணைந்துள்ளார். முக்கிய வேடத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். சந்தோஷ் குருவில்லா தயாரிக்கிறார். தமிழிலும், மலையாளத்திலும் ரிலீசாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

Related Stories: