சென்னை: இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக் கோடு கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்தவர் பஹிதி(வயது27). இவர் மாடலிங் துறையில் இருக்கிறார். சினிமாவிலும் நடன இயக்குனராக உள்ளார். வாலிபர் பஹிதி இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அதில் அவருக்கு ஏராளமானோர் நண்பர்களாக உள்ளனர். மாடலிங் துறையில் நடன இயக்குனராக இருப்பதால் அவருடன் ஏராளமான இளம்பெண்களும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்திருக்கின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹிதி, இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியக்கூடிய ஐ.டி. பெண் ஊழியர், பஹிதி மீது போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்த போது பஹிதி பல இளம்பெண்கள் மட்டும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.