முன்பு இருந்த சான்றிதழ்களில் U,A,UA என இருந்தாலும் மக்களிடயே எந்த வயதினருக்கு? எந்த சான்றிதழென்ற குழப்பம் நிலவி வந்தது. ஆனால் தற்போது சான்றிதழோடு வயதும் வருவதால் இது சுலபமாகிறது.
இந்த மாற்றம், குழந்தைகள், இளம் பார்வையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பையும், உணர்வையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 13 வயதிற்கும் கிழ் உள்ள பிள்ளைகள் சில சமயங்களில் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை புரிந்துகொள்ளும் ஏற்படும் சிக்கலில் இருந்து விடுபட உதவும். சமூக பாதுகாப்பு, பெற்றோர் வழிகாட்டல், மற்றும் விளம்பர ஒழுங்குகள் போன்றவை இந்த புதிய விதிமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, இந்தியாவில் திரைப்பட தணிக்கை சட்டமான 1952 க்கும், திரைப்பட மத்திய சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சீர்திருத்தங்களுக்கும் முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கான நடைமுறை நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஜூலை முதல் முழுமையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.