சென்னை: ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட் (BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகிறது. எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ரவி மோகன் தயாரிக்கிறார்.