75 நகரங்களில் பேட்மிண்டன் பள்ளி; தீபிகா படுகோன் தகவல்

மும்பை: தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன் உலக நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரராக இருந்தவர். சிறுவயதில் இருந்து பேட்மிண்டன் விளையாடி வந்தது தனது வாழ்க்கையை பெருமளவு மாற்றியதாக தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையின் பிறந்த நாளையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தீபிகா, தங்களது படுகோன் பேட்மிண்டன் பள்ளியின் சேவை தொடங்கிய முதல் ஆண்டிலேயே 75 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பேட்மிண்டனை அனைவருக்கும் கொண்டு செல்வதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேட்மிண்டன் விளையாட்டு என் வாழ்க்கையை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் செதுக்கியுள்ளது. என்னுடைய இந்த பேட்மிண்டன் பள்ளியின் மூலம் பலரின் வாழ்க்கையில் ஒழுக்கமும் மகிழ்ச்சியும் ஏற்படும் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: