அனுஷ்காவின் போஸ்டரால் நடந்த 40 விபத்துகள்

ஐதராபாத்: அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்துள்ள தகவல் நீண்ட காலத்துக்கு பிறகு வெளியே தெரியவந்துள்ளது. தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக அவரது நடிபில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளியானது. ஆனால் உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தற்போது காதி என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை ஏற்கனவே அனுஷ்காவின் வேதம் படத்தை இயக்கிய கிரிஷ்தான் இயக்கியுள்ளார்.

இப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘வேதம்’ படம் ரிலீஸாகி 15 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கிரிஷ் அதுகுறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘‘வேதம் படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை ஐதராபாத்தில் இருக்கும் பஞ்சகுட்டாவில் வைத்தோம். அப்போது அந்த போஸ்டரை ஓட்டுநர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். ஒருகட்டத்தில் அந்த போஸ்டரை பார்த்ததால் கிட்டத்தட்ட 40 விபத்துக்கள் ஏற்பட்டன. அது எங்களுகு விசித்திரமாக இருந்தது. அதனையடுத்து காவல் துறை கேட்டுக்கொண்டதால் அந்த போஸ்டரை அவ்விடத்திலிருந்து எடுத்துவிட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: