சென்னை: குடும்பப்பாங்கான கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் படம், ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’. ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தை சொல்லும் நெகிழ்ச்சியான இக்கதையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நாசர் ஹீரோவாக நடிக்கிறார். அதுபோல், பல வருட இடைவெளிக்கு பிறகு அவரது படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். நாசர் ஹீரோவாக நடித்து இயக்கிய ‘அவதாரம்’ என்ற படத்துக்காக இளையராஜா இசை அமைத்த ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி, அது ஒலிக்காத நாளில்லை, மேடையில்லை.
அதற்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். தனபால் பத்மநாபன் எழுதி இயக்கும் இப்படத்தை எக்ஸ்ஃபோரியா ஐஜீன் புரொடக்ஷன்ஸ், ஜென் வெர்ஸ், எம்பர்லைட் ஸ்டுடியோஸ் சார்பில் சசி நாகா, சுரேஷ் செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.