ஐதராபாத்: தமிழில் பிசியாக நடித்து வந்த மாதவன் இடையில் சிறு பிரேக் விட்டவர் பின் ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கினார். இந்தி வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் மாதவன் ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதாவது ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு-பிரியங்கா சோப்ரா நடிக்க ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. தென் ஆப்ரிக்கா காடுகளில் உருவாகும் இப்படத்தில் பிருத்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது மாதவன் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அவருக்கு வில்லன் வேடமாம். இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்ஷன் அட்வென்சர் படமாக இருக்கும்’ என்று ராஜமௌலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.