படம் படுதோல்வி: ரூ.4.75 கோடியை தயாரிப்பாளருக்கு கொடுத்த ஹீரோ

ஐதராபாத்: படம் தோல்வி அடைந்தால் நஷ்டத்தை தயாரிப்பாளர் தலையில் கட்டி விட்டு எஸ்கேப் ஆகும் ஹீரோக்கள் மத்தியில் தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகடா வித்தியசாமாக இருக்கிறார். ‘குண்டூர் டாக்கீஸ்’, ‘டிஜே தில்லு’, ‘தில்லு ஸ்கொயர்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சித்து ஜொன்னலகடா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜேக்’. இந்த படம் கடந்த மாதம் வெளியாகி, பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து ரூ.4.75 கோடியை சித்து திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

‘சித்துவுக்கு அவரது மார்க்கெட்டுக்கு ஏற்ப ரூ.10 கோடி சம்பளமாகும். அதில் 4.75 கோடியை தயாரிப்பாளர்கள் கேட்காமலேயே அவராகவே திருப்பித் தந்துள்ளார்’ என பட வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சித்துவை பாராட்டி வருகிறார்கள்.

Related Stories: