டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்: விமர்சனம்

யூ-டியூப் மூலம் திரைப்படங்களை கடுமையாக விமர்சிக்கும் சந்தானம், ஒரு படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு அழைக்கப்படுகிறார். அவரது தந்தை நிழல்கள் ரவி, தாய் கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் தியேட்டருக்கு செல்ல, அங்கு அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த சந்தானம், அவர்களை காப்பாற்ற துடிக்கிறார். ஆனால், அங்கு திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக அவரும், அவரது குடும்பத்தினரும் சிக்கிக்கொள்கின்றனர். அதன் பின் நடப்பதே மீதி படம். பன்ச் டயலாக் பேசி கலாய்த்து, முழு படத்தையும் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் சந்தானம். அவரது கெட்டப் மாறியுள்ளது. நடித்த அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்த அவரை பாராட்ட வேண்டும்.

அழகும், இளமையும் கொண்ட ஹீரோயின் கீத்திகா திவாரியின் பேய் வேடம் மிரட்டுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த் ஜோடியின் ‘உயிரின் உயிரே’ டூயட், செம கலாய்ப்பு. சைக்கோ இயக்குனராக செல்வராகவன், கப்பல் கேப்டனாக நிழல்கள் ரவி, இந்த வயதிலும் கவர்ச்சிக்கு மாறிய கஸ்தூரி மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, கணேஷ்கர், மாறன் கூட்டணி சிரிக்க வைத்தாலும், சில நேரங்களில் நீண்ட வசனங்கள் சோர்வடைய வைக்கின்றன. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு, ஆப்ரோ இசையில் பாடல்கள், பரத் விக்ரமனின் எடிட்டிங் பலே. எழுதி இயக்கியுள்ளார் எஸ்.பிரேம் ஆனந்த். கோடை விடுமுறைக்கு ஏற்ற ஜாலியான படம்.

Related Stories: