மாமல்லபுரம், ஏப்.10: நெம்மேலியில் கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி இசிஆர் சாலை கடற்கரையையொட்டி அமைந்துள்ள தர்காவில் 352ம் ஆண்டு கந்துரி எனப்படும் சந்தனக்கூடு விழா வெகு விமரிசையாக நேற்று விடிய, விடிய கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் ஜமாத்தார் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, அதிகாலை 4 மணியளவில் தர்காவில் சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.
சந்தனக்கூடு விழா முடிந்ததும், குடத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட சந்தனத்தை கையில் வாங்கி பலர் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சிலர், அதனை வாங்கி நெற்றியில் திலகமிட்டு கொண்டனர். குறிப்பாக, விழாவில் பங்கேற்ற இந்துக்களுக்கு மதங்களை கடந்து குடத்தில் கொண்டு வரப்பட்ட சந்தனத்தை இஸ்லாமிய குருமார்கள் வழங்கினர். இந்த, சந்தனக்கூடு விழாவில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், இந்துக்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
The post நெம்மேலியில் சந்தனக்கூடு விழா கோலாகலம் appeared first on Dinakaran.