விஏஓ சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் கிராம உதவியாளர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

செங்கல்பட்டு, ஏப்.25: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் கிராம உதவியாளராக கீதா பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக முத்துமாரி பணியாற்றி வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் ஆண்கள் மது போதையில் வருவதால் தனது பணியை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும். கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரியை சந்திக்க வருபவர்கள் அடிக்கடி மது போதையில் வந்து கீதாவிடம் தகறாரில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் கிராம உதவியாளர் கீதாவை திட்டியாதாக கூறி, மன உளைச்சலுக்கு ஆளான, அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டானர். இதனிடையே, கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை சஸ்பென்ட் செய்ய வேண்டும். அவரது வாரிசு அரசு வேலை வழங்க வேண்டும் என கீதாவின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து வாங்க மறுத்து உறவினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று விஏஓவை சஸ்பென்ட் செய்தும், கீதாவின் மகளுக்கு அரசு வேலை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கீதாவின் உடலை உறவினர்கள் நேற்று வாங்கி சென்றனர். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

The post விஏஓ சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் கிராம உதவியாளர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: