செய்யூர், ஏப்.26: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள கயப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கயப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் தினமும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் சுகாதார நிலையத்தை சுற்றி செடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதுவரையில் சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. இதனால் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் வளாகத்தில் நடமாட தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், நோயாளிகள் அச்சத்துடன் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. எனவே, இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வரும் நோயாளிகள் பாதுகாப்பு நலன் கருதி சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கயப்பாக்கம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.