வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம், ஏப். 24: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் நாராயண சர்மா வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். இதில், குறிப்பாக வெள்ளபுத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வட்டார நாற்றங்கள் பண்ணை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் கேட்டறிந்தார். பின்பு, சி.ஆர்.ஐ தொழில்நுட்ப முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது, உதவி செயற்பொறியாளர் தனசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை, பொறியாளர் ராமசாமி, வட்டார மேற்பார்வையாளர் லட்சுமணன், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: