கூடுவாஞ்சேரி, ஏப். 24:கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதியில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 11 மணி அளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அந்த வாலிபர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர், பெரம்பூர், செம்பியம் பகுதி, டீட்ஸ் கார்டன் 7வது தெருவை சேர்ந்த பாலாஜி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலாஜி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.