அறந்தாங்கி, ஜன. 14: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களை கொண்டு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரையன், கருணாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊராட்சிப் பகுதிகளில் உள்ள, பள்ளிகள், சந்தைகள் பஸ் நிறுத்தம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை ஆய்வு செய்த அவர்கள், தொடர்ந்து இது போன்று தூய்மையாக இருக்கும் வண்ணம், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொள்வதோடு, பொதுமக்கள் பொதுமக்களும் உதவிட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
