காஞ்சிக்கோவில் அரசு பள்ளியில் 7 ஏக்கரில் விளையாட்டு மைதானம் திறப்பு

 

பவானி, ஜன. 14: காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, காஞ்சிக்கோவில் கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கே.ஆர்.கவியரசு தலைமை தாங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். தீரன் பாசறை செயலாளர் பி.துளசிமணி வாழ்த்துரை வழங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ச.கந்தசாமி, மைதானத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு 7 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நன்கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, காஞ்சிக்கோவில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கே.பி.முத்துசாமியின், வாழ்க்கை வரலாற்று நூலை வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் வெளியிட, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பெரியசாமி பெற்றுக் கொண்டார். முடிவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கங்கா டி.லோகீஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: