பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

 

தஞ்சாவூர், ஜன.14: பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று தலைமையாசிரியர் சித்ரா தொடங்கி வைத்தார். இதில், மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பூண்டியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியை முதுகலை தமிழாசிரியர் கார்த்திகா, அறிவியலாசிரியர் கனகராஜூ ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: