கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 123 மாணவர்களுக்கு மடிக்கணினி

 

மன்னார்குடி, ஜன. 14: கோட்டூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் 123 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை எம்எல்ஏ மாரிமுத்து வழங்கினார். கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஐடிஐ முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ மாரிமுத்து கலந்து கொண்டு 123 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், தொழில்கல்வி படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதனை, தொழிற் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அதற்கு, இந்த மடிகணினிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: