நீடாமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

 

நீடாமங்கலம், ஜன. 14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பரப்பனாமேடு கடம்பூர் காளியம்மன் கோயில் தெருவில் நாய் தொல்லைகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று தெருவில் விளையாடிய கதிர்(8), சுதன்(8) ஆகிய 2 சிறுவர்கள் மற்றும் தினேஷ்(24), சிதம்பரம்(57), சாந்தி(61) உள்ளிட்ட 7 பேரை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்தது.

இதில் காயமடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: