போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது

 

ஈரோடு,ஜன.14: ஈரோடு சத்தி சாலையில் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியை சேர்ந்த சந்தோஷ்(21), ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த திலீப் (24), வளையக்கார வீதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(23) ஆகியோர் என்பதும், அவர்களை சோதனை செய்தபோது, போதை மாத்திரையை விற்பனைக்காகவும், உபயோகப்படுத்துவதற்காகவும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 20 போதை மாத்திரைகளும், 3 ஊசிகளும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: