புதுக்கோட்டையில் இரண்டு நாட்களாக மழை

 

புதுக்கோட்டை, ஜன. 14: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலான மழை நேற்று பெய்தது. ஆலங்குடி, திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதலே சாரல் மழை தொடங்கி, மிதமான மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல் ஆலங்குடி திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பனியால் குளிர்ச்சியான சூழல் நிலவி வரக்கூடிய நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Related Stories: