1,100 பேருக்கு விலையில்லா இணையவழி வீட்டு மனைப்பட்டா

 

மஞ்சூர், ஜன.14: குந்தா மற்றும் ஊட்டியில் நடந்த விழாவில் 1,100 பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டு மனைப்பட்டாக்களை ஆ.ராசா எம்.பி. வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா இணையவழி வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்குந்தா 1,2, மேல்குந்தா, கிண்ணக்கொரை உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த 592 பயனாளிகளுக்கு இணைய வழி வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா மஞ்சூர் மின் வாரிய மேல்முகாமில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ முன்னிலை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், குந்தா தாசில்தார் சுமதி, ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, துணைத்தலைவர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையது முகம்மது வரவேற்றார்.

Related Stories: