சமவெளி பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், பூளை பூ விற்பனைக்கு குவிந்தது

 

ஊட்டி, ஜன. 14: நாளை ெபாங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், பூளை பூ போன்ற பொருட்கள் நீலகிரியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளது. இம்முறை வறட்சி ஏற்பட்டு தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலும் பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை விவசாயிகள், பொதுமக்கள் கொண்டாடுவது வழக்கம். பெரும்பாலான விவசாயிகள் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் கரும்பு, மஞ்சள், பூளை பூ, மண் பானைகள் போன்றவை சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று வந்து சேர்ந்தன. இப்பொருட்கள் நீலகிரியில் விளையாத நிலையில், ஆண்டுதோறும் சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டுவருவது வழக்கம். நேற்று முதல் இப்பொருட்கள் வரத்துவங்கியுள்ள நிலையில், ஊட்டி மார்க்கெட்டிற்கு கரும்பு, மஞ்சள், வாழை, பூளை பூ ஆகியன வந்து சேர்ந்தன. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிறு வியாபாரிகள் பலரும் வாங்கிச்சென்றனர். இம்முறை கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், மாட்டு பொங்கலை முன்னிட்டு திருஷ்டி கயிறுகள், மூக்கு கயிறுகள் ஆகியவைவும் அதிகளவு விற்னைக்கு வந்துள்ளன.

Related Stories: