புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வந்தது

 

ஒரத்தநாடு, ஜன.14: ஒரத்தநாடு பருத்திக்கொட்டையில் புதிய மின்மாற்றியை மின்சார வாரிய அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரத்தநாடு கோட்டம் வடக்கு பிரிவின் சார்பில் மின் மாற்றி ஒன்று இடமாற்றம் செய்யப்பட்டு, பருத்திக்கோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி செயற் பொறியாளர் ராஜேஸ்வரமூர்த்தி, உதவி பொறியாளர் மனோகரன், மின்பாதை ஆய்வாளர்கள் சுப்ரமணியன், கணேசன், சுரேந்தர் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: