திருத்துறைப்பூண்டி, ஜன. 14: பாரத சாரண சாரணிய இயக்க தேசிய தலைமையகத்தின் சார்பில் சட்டீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டம் புத்லியில் நடைபெறும் முதலாவது திரி சாரண, சாரணியர்களுக்கான தேசிய பெருந்திரளணி முகாமில் மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தினர் 58 பேர் கலந்து கொண்டுள்ளனர். முகாமின் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில் மாவட்ட செயலாளர் சக்கரபாணி, மாவட்ட அமைப்பு ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் ரத்ததானம் செய்து சாரண, சாரணியர்களிடையே ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் மாவட்ட இணை செயலாளர் தர்மாம்பாள், திரிசாரண படை தலைவர்கள் ரமேஷ், பழனிவேல், ஸ்டாலின் சிவா, வருண்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
