பல்லடம், ஜன. 14: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் இதுவரை தமிழகத்தில் 99 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 100வது போராட்டத்தை சென்னையில் நடத்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி பழனிசாமி ஆகியோர் கூறியதாவது:தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், ரேஷன் கடைகளில், பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இக்கோரிக்கையை முன்வைத்து, நூறு நாள், நூறு ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மாளிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 99 ரேஷன் கடைகளில் இதுவரை போராட்டம் நடத்தி முடிவடைந்துள்ளது. இதற்கிடையே, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கோவை, நீலகிரி, தர்மபுரி, தேனி ஆகிய நான்கு மாவட்ட ரேசன் கடைகளில், பரிட்சார்த்த முறையில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
