கோவை, ஜன.14: கோவை திருமலையம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நேரு கல்வி நிறுவனத்தின் செயலாளர் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், நிர்வாக இயக்குநர் நாகராஜா, கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக தமிழ்த்துறை தலைவர் தேவி நன்றி கூறினார்.
